யாழில் பெய்துவரும் மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வெளியான தகவல் (Photos)
யாழ். மாவட்டத்தில் சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்றைய தினம் (03.02.2023) யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மழை காரணமாக 6 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 சிறுதொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் நேற்றைய தினம் (02.02.2023) 24 மணி நேரத்திற்குள் 118. 5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், நாளை (04.02.2023) வரை இந்த மழை தொடரும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரப்போகிறது... நாம் முன்வரிசையில்: விளாடிமிர் புடினுக்கு உறுதி அளித்த சீன ஜனாதிபதி News Lankasri

'வானத்தை உன்னிப்பாகக் கவனியுங்கள்' சர்வதேச நீதிமன்றத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்.! ரஷ்யாவிலிருந்து மிரட்டல் News Lankasri
