உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் குடும்பஸ்தர்கள் மூவர் கைது
மூன்று உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலனறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பகுதியில் மேற்படி 3 சந்தேகநபர்களும் நேற்றுமுன்தினம்(5) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவரும் கைது
அரலகங்வில பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அரலகங்வில ருஹுனுகம பகுதியை சேர்ந்த 31, 34 மற்றும் 39 வயதுடையவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூவரும் குடும்பஸ்தர்கள் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா



