வவுனியாவில் அனோஜனுக்காக ஒன்றிணைந்த மக்கள்
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி மூவினத்தவரும் இணைந்து வவுனியாவில் நடைபவனி மேற்கொண்டதுடன்,கையெழுத்து சேகரித்தல் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் இணைந்து நேற்று (25.09.2026) இதனை முன்னெடுத்தனர். வவுனியா கந்தசாமி ஆலயத்தில் அனோஜனுக்கு விடுதலை வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
கவனயீர்ப்பு
அதனைத் தொடர்ந்து இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ, பௌத்த மதத் தலைவர்களின் பங்கேற்புடன் அங்கிருந்து நடைபவனியாக வவுனியா பெரிய பள்ளிவாசல் நோக்கிச் சென்றனர்.
பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்ற பின்னர், அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்து பெறும் முன்னெடுக்கப்பட்டது.

நடைபவனியாக சென்றவர்களும் அதில் இணைந்து கொண்டு கையெழுத்திட்டனர். பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துகள், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை அரசாங்கமும் இந்த விடயத்தில் இராஜதந்தர மட்டத்தில் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ், முஸ்லிம் மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.





பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri