அம்பாறை மாவட்டத்தில் 24 மணித்தியாலத்தில் 3 எரிவாயு அடுப்புகள் வெடித்துச் சிதறின
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணி தொடக்கம் இன்று(02) பகல் 12 மணி வரையில் 3 எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான இன்று(02) பகல் 11.30 மணிக்கு எரிவாயு அடுப்பில் சமைக்க முற்பட்டபோது எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
அதேவேளை காத்தான்குடி மொடோன் பாம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளதுடன், இந்த இரு வெடிப்பு சம்பவங்களிலும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள வளத்தாப்பிட்டி பிரதேசத்திலுள்ள செல்லையா விஜயா என்பவரின் வீட்டின் எரிவாயு அடுப்பு இன்று பகல் 11 மணியளவில் வெடித்துச் சிதறியுள்ளதாகவும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சம்மாந்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்தந்த பிரதேச பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam