ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு முன்வந்துள்ள 3 நிறுவனங்கள்
ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா(0 தெரிவித்துள்ளார்.
அவற்றில் 2 வெளிநாட்டு நிறுவனங்களாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கூறியுள்ளார்.
விலைமனுக்கோரல் சபை
விலைமனு கோரலை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை தற்போது விலைமனுக்கோரல் சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக விலைமனு கோரலை சமர்ப்பிக்க வழங்கப்பட்டிருந்த காலப்பகுதி, கடந்த மார்ச் 5ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.
எனினும் குறித்த காலப்பகுதியை 45 நாட்களால் நீடிப்பதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நடவடிக்கை எடுத்திருந்தார்.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கான முதலீட்டாளரைக் கண்டறிவதற்காக 1.2 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் பெறுமதியை குறைப்பதற்கு உலக வங்கியின் முதலீட்டு ஆலோசனை நிறுவனமான சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் எனப்படும் IFC நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 17 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மனைவியுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு வருடமும் ரூ.1,11,000 பெறலாம்.., Post Office திட்டம் தெரியுமா? News Lankasri
