செல்லுபடியாகும் பதிவு உரிமங்கள் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது
செல்லுபடியாகும் பதிவு உரிமங்கள் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்ததற்காக 3 நபர்களை குற்றப் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேக நபர் குறித்த விசாரணையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மீகஹாவத்த பகுதியில் கைது செய்யப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் என்பன பறிமுதல்
இந்த நடவடிக்கையின் போது, அவர்களிடமிருந்து மூன்று கார்கள், இரண்டு ஜீப்கள், லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட 21, 39 மற்றும் 44 வயதுடைய நபர்கள், மீகஹாவத்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam