புதுக்குடியிருப்பில் சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 2 ஆம் வட்டாராம் கோபம்பாவில் பகுதியில்நேற்று முன்தினம்(03) தனியார் காணி ஒன்றில் சட்டவிரோதாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பேரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.
குறித்த காணியில் தோண்டுவதற்கான அனுமதி இன்றி கனரக இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கை முன்னெடுத்த வேளை சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கோம்பாவில்,மன்னாகண்டல்,யாழ்ப்பாணம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதான சந்தேக நபர்களை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
இவர்களை எதிர்வரும் 12.10.21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.





உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan
