இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
கோவிட் தொற்று உறுதியான மேலும் 1,172 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 3,110 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,282 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 390,000 ஆக அதிகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
கோவிட் தொற்று உறுதியான மேலும் 3,110 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 388,806 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும்18,769 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 342,159 ஆக அதிகரித்துள்ளது.

சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam