புல்மோட்டை பிரதான வீதியில் விபத்து - இரு இளைஞர்கள் படுகாயம்
திருகோணமலை -புல்மோட்டை பிரதான வீதி நிலாவெளி பீச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புல்மோட்டை பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் கும்புறுபிட்டி பகுதியைச் சேர்ந்த 28, 30 வயதுடைய இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 1990 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri