தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 2 தொன் இஞ்சி பறிமுதல்
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 தொன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சி சுங்கத்துறை அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மீட்பு நடவடிக்கை இன்று(13.06.2024) இடம்பெற்றுள்ளது.
60 சாக்கு மூட்டைகள்
இராமநாதபுரம்(Ramanathapuram) - மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினம் கடற்றொழிலாளர் கிராமத்தில் 60 சாக்கு மூட்டைகளில் கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் இஞ்சியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக இஞ்சி மூட்டைகள் பதுக்கி வைக்கப்படிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட இஞ்சி இந்திய மதிப்பு சுமார் 3 இலட்சம் இருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
