சட்டத்துறை வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை என்றால் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி (Video)
சட்டத்துறை வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை என்றால் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரியே என ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் அலுவலக வளாகத்தில் நேற்று(26.07.2023) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்பொழுது அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை மற்றும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைசுடரும் ஏற்றப்பட்டது.
மேலும், விழிப்புலனற்றோருக்கான உணவுப் பொதிகள் மற்றும் பொருண்மியம் நலிந்த மாணவர்களுக்கான காலணியும் கௌரி சங்கரி தவராசாவின் ஞாபகார்த்த அறக்கட்டளையினால் வழங்கபட்டது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்,வன்னி லழிப்புலனற்றோர் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
