27.5 லீட்டர் கசிப்புடன் 29 வயது வர்த்தகர் கைது..! பொலிஸாரின் தொடர் தீவிர சோதனை
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை நேற்று(30.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
27.5 லிட்டர் கசிப்புடன் இளைஞர் கைது
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசேட புலனாய்வு பிரிவினர் திராய்மடுவில் உள்ள நீண்ட காலமாக கசிப்பு வியாபரத்தில் ஈடுபட்டு வரும் கசிப்பு வர்த்தகரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 27.5 லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சட்டவிரோதமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் கொக்குவில் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகளை தெரிவித்திருந்தும், அவர் தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.