இஸ்ரேலை இலக்கு வைக்கும் ஹமாஸ்: ஐ.நா அமைப்பை சேர்ந்த 29 பேர் பலி
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் இதுவரை, காசாவில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விடயத்தினை பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பு தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்டுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்
மேலும், அவர்களில் 50 சதவீதத்தினர் ஆசிரியர்கள் எனவும் இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைவதாகவும் எங்கள் வேதனைகளை ஒருவருக்கொருவர் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் இந்த அமைப்பானது பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரணம் மற்றும் மனித வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கவலை தெரிவித்ததுடன், உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

பெற்றோர்களுக்கு தெரிந்த உண்மை, ஷாக்கில் ஆனந்தி எடுத்த சோகமான முடிவு... சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா பதிலடி! பரஸ்பர வரி உயர்வால் உலகப் பொருளாதாரத்தில் அதிர்ச்சி News Lankasri
