யாழில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கை: பலர் கைது
யாழ்ப்பாணத்தில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 45 போத்தல் கசிப்பு, கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் , 90 லீட்டர் கோடா , சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் என்பவற்றை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , பொலிஸாரின் விசேட நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 11பேர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




