கிளிநொச்சியில் இன்று 29 தொற்றாளர்கள் அடையாளம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் (19) 29 கோவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் மாத்திரம் 29 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 17 பேர் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவர்.
ஏனையவர்கள் முழங்காவில், பரவிபாஞ்சான், கனகபுரம், மருதநகர்,பூநகரி உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்பதோடு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற காலியைச் சேர்ந்த தாதி ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு சில நாட்களில் மாத்திரம் 80 பேருக்கு மேல்
கோவிட் 19 தொற்றுடன் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan