இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 29 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு
தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற போதைப்பொருள் கியூ பிரிவு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இன்றையதினம்(02)
இலங்கைக்கு படகு மூலம் 'சாரஸ்' என்ற அதிநவீன போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ
பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
இதன்போது, கியூ பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில் பொலிஸார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் அங்கு இருந்த படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 58 கிலோ சாரஸ் என்ற போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளானது சர்வதேச மதிப்பின் படி 29 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கடத்தல் தொடர்பாக தூத்துக்குடி, சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் உற்பட 3 பேரை கைது செய்து கியூ பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன், கியூ பிரிவு பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் கஞ்சாவை உருக்கி ஒரு கிலோ சாரஸ் ஆக உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், அண்மைக்காலமாக தூத்துக்குடியில் இருந்து போதைப்பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது வழக்கமாக நடந்து கொண்டிருந்தாலும் தற்போதைய இந்த கடத்தல் மிகப்பெரிய அளவில் பார்க்கப்படுகிறது.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
