கோவிட் தொடர்பான நடவடிக்கைகளுக்கு 286 பில்லியன் ரூபா செலவு! - அரசாங்கம் அறிவிப்பு
அரசாங்கம் இதுவரை பொது மக்களுக்கான நலன்புரி நோக்கங்கள் உட்பட கோவிட் -19 தொடர்பான நடவடிக்கைகளில் 286 பில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
தொற்றுநோயின் ஆரம்பத்திலிருந்தே மக்களுக்கு 5000 ரூபாய் மற்றும் தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட தேவைகளுக்காக 130 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும் ரூ .5000 வழங்குவதற்கான முயற்சி வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 4 மில்லியன் குடும்பங்களுக்கு ரூ 5000 நிவாரணம் வழங்க முடிந்துள்ளது என்று அமைச்சர் கூறினார் .
இதற்கிடையில், நாட்டில் உள்ள தடுப்பூசி மையங்களில் ஏற்பட்ட தவறுகள் அடையாளம் காணபட்டுள்ளன, எனவே எதிர்காலத்தில் தடுப்பூசி இயக்கத்தை மிகவும் பயனுள்ள முறையில் மேற்கொள்ள முடியும் என்று கெஹலிய குறிப்பிட்டார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri