நள்ளிரவில் உக்ரைன் மீது தாக்குதல்: 28 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
கிரிமியா நோக்கி ஏவப்பட்ட 28 உக்ரைன் ட்ரோன்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ட்ரோன் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்தில் திங்கட்கிழமை அதிகாலை கிரிமியாவின் பாலத்தை உக்ரைனின் கடல் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளன.
மேலும் தாக்குதலின் போது பாலத்தில் பயணித்த காரொன்று பலத்த சேதமடைந்ததுடன், காரில் இருந்த தம்பதியர் பலியாகியுள்ளனர். அவர்களது 14 வயது சிறுமி படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிரிமியாவை நோக்கி ஏவப்பட்ட 28 உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்யாவின் வான் தடுப்பு மற்றும் எலக்ட்ரானிக் கவுண்டர் செயற்பாட்டு அமைப்புகள் இணைந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சுட்டு வீழ்த்தி இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் முன்னெடுத்த இந்த ட்ரோன் தாக்குதலில் எத்தகைய உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |