விசேட சுற்றிவளைப்பில் பொலிஸாரிடம் சிக்கிய 277 பேர்
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 86 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 112 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 73 பேரும், கஞ்சா செடிகளுடன் 6 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட சுற்றிவளைப்பு
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 61 கிராம் 161 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 744 கிராம் 377 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் 1 கிலோ 507 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 2 இலட்சத்து 57 ஆயிரத்து 991 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri