கண்டியில் இளம் பிக்கு உயிரிழப்பு: தீவிர விசாரணையில் பொலிஸார்
கண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்த 27 வயது புத்த துறவியின் மரணம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டியில் உள்ள உடஹிகுல்வல பகுதியில் உள்ள ஆரண்ய சேனாசனத்தில் 27 வயது புத்த துறவி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம்
ஆரண்ய சேனாசனத்தில் தனியாக வசித்து வந்த குறித்த புத்த துறவி அவரது படுக்கையில் இறந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சம்பவம் நடந்த நேரத்தில், சேனாசனத்தின் தலைமைத் துறவி, அவிசாவெல பகுதிக்கு கற்பிப்பதற்காக சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்த ஆரம்ப விசாரணைகளில் மரணத்திற்கான காரணம் குறித்து எந்த விவரங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |