ஐ.நாவில் அநுர அரசிற்கு ஆபத்தான 27 சாட்சியங்கள்! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
இலங்கையில் மோதல் தொடர்பான பாலியல் வன்முறைகள் பெரும்பாலும் இன்றுவரை கவனிக்கப்படாமல் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும், நீண்டகாலமாக நீதி மறுக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக 2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர், அரச படைகளாலும், இராணுவத்தினராலும் பாலியல் வன்முறைகள் பரவலாக நிகழ்த்தப்பட்டதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், உள்நாட்டு பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கும், மாற்றத்தக்க சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் இலங்கை அரசாங்கம் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இவ்வாறாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |