கொழும்பில் நரகங்களாக காணப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் - அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கொழும்பிலுள்ள 27 அடுக்குமாடி குடியிருப்புக்கள் நரகங்களாக காணப்படுவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மக்கள் வாழக்கூடிய வகையில் அடுக்குமாடி குடியிருப்புகளை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு
இந்த ஆண்டில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளையும், எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் 11 அடுக்குமாடி குடியிருப்புகளையும் கட்டி முடிக்க எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோரை குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமூகத் தேவைகளின் அடிப்படையில் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் எனவும் குறைந்த வருமானம் உடையவர்களைக் குடியமர்த்துவது தொடர்பான அளவுகோல்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், அந்த அளவுகோல்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri