கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 26 கோவிட் தொற்றாளர்கள்
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் பதிவான தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களே புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமையவே புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை, கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் எண்மரும், கொட்டகலை வூட்டன் தோட்டத்தில் 8 பேரும் ஏனைய தொற்றாளர்கள் தலவாக்கலை, வட்டகொட, போகாவத்தை, ரொசிட்ட வீட்டு திட்டம், திம்புளை – பத்தனை ஆகிய பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
26 தொற்றாளர்களையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.





அய்யனார் துணை: ஜோசியரால் பயத்தில் சேரன்.. தம்பிகள் செய்த விஷயம்.. இறுதியில் எடுத்த முடிவு! Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
