செட்டிகுளத்தில் கோவிட் தொற்று காரணமாக 25 வயது இளைஞன் மரணம்
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கோவிட் தொற்று காரணமாக 25 வயது இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வசித்து வந்த இளைஞர் ஒருவருக்குக் கடந்த சில நாட்களாகக் காய்ச்சல் இருந்துள்ளது.
இதனையடுத்து குறித்த இளைஞன் நேற்று மாலை (31.08) செட்டிகுளம் வைத்தியசாலைக்குச் சென்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிட் தொற்றுக்கான மருந்துகளை எடுத்துக் கொண்டு வீட்டில் சென்று குறித்த இளைஞன் தங்கியிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்தவர் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வந்த 25 வயதுடைய மன்சூர் முகமட் சப்ரான் என்பவராவார்.
சடலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு, உறவினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டக்களப்பு, ஓட்டமாவடி மயானத்தில் அடக்கம் செய்வதற்காக இராணுவத்தினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
