எதிர்கட்சியில் இணையும் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் : சுஜீவ சேனசிங்க
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு இக்குழுவினர் நாடாளுமன்றத்திற்கு தெரிவானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித்
இந்த குழுவுடன் கூட்டு எதிர்க்கட்சியாகவும் எதிர்காலத்தில் அரசியல் கூட்டமைப்பாகவும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan