உயர் பொலிஸ் அதிகாரிகள் 25 பேருக்கு இடமாற்றம்
உயர் பொலிஸ் அதிகாரிகள் 25 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் பரிசோதகர் நிலை மற்றும் அதற்கு இணையான பதவிகளில் உள்ள 25 பொலிஸ் அதிகாரிகள் இவ்வாறு உடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த இடமாற்றங்கள் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன், பொலிஸ் மாஅதிபரின் உத்தரவின் பேரில் இன்று (21) முதல் அமலுக்கு வருகிறது.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் குழுக்களுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நோரோச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரவி பத்மகுமார கடந்த 19ஆம் திகதி முதல் கம்பஹா பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்படி விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam