தண்ணீர் போத்தல்களை கூடுதல் விலைக்கு விற்றவர்களுக்கு 25 மில்லியன் அபராதம்
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலையில் விற்ற வியாபாரிகளுக்கு 25 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகள் மீது இவ்வாறு 25 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அறிவிப்பு
கடந்த ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான ஆறு மாத காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த ஆறு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் மொத்தம் 306 சுற்றிவளைப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் அதிகமானவை கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்காலத்திலும் இத்தகைய சட்டவிரோத விற்பனைகளை தடுக்கும் நோக்கில் தொடர்ச்சியான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
