கைதான 25 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 25 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு,கைதான 12 கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த (2026-02-19) அன்று இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் 25 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விடுதலை
இவர்களின் வழக்கு தொடர்ச்சியாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில் நேற்று(31.3.2026) மீண்டும் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது 25 கடற்றொழிலாளர்களும் மல்லாகம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டனர்.

இதேநேரம் 2026-02-18 அன்று கைது செய்யப்பட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான வழக்கு நேற்றையதினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அநுர அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி போர்க்கொடி! தரமற்ற நிலக்கரிக்கு எதிராகத் தொடர் கருத்தரங்கு நடத்த முடிவு