நாட்டில் 24 டெல்டா தொற்றாளர்கள் அடையாளம்
நாட்டில் இதுவரையில் கோவிட் பெருந்தொற்று திரிபுகளில் ஒன்றான டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட 14 பேர் கண்டறியப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது மேலும் 10 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
கோவிட் பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிமுறைகளை அதி உச்ச அளவில் பின்பற்ற வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்டா திரிபு பரவுகை தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றுமொரு ஆய்வினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுமாறான அடிப்படையில் எடுக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
அடுத்த வாரமளவில் இந்த ஆய்வு முடிவுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
