கொழும்பில் ஆபத்தாக மாறியுள்ள 24 அடுக்குமாடி குடியிருப்புகள் : சிறுவனுக்கு ஏற்பட்ட ஆபத்து
கொழும்பின் புறநகர பகுதியான மோதரையிலுள்ள ஹெலமுத்து செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உட்பட 24 அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்ற கட்டுமானத்தில் இருப்பதாக நகர மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட பகுதிகளை பொதுமக்கள் வாழக்கூடியதாகவும் பாதுகாப்பானதாகவும் மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக நகர மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பலத்த காயமடைந்த சிறுவன்
மோதர ஹெலமுத்து செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஏழாவது மாடியில் நேற்று சீமெந்து கலவை உடைந்து விழுந்ததில் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
பலத்த காயமடைந்த சிறுவன் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மோதர ஹெலமுத்து செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஏழாவது மாடியில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடையே உள்ள வெளிப்புற சுவரில் உள்ள ஒரு பகுதி நேற்று காலை 8.30 மணியளவில் இடிந்து விழுந்தது.
அடுக்குமாடி குடியிருப்பு
காயமடைந்த 7 வயது சிறுவன் தனது பாட்டியுடன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் அடிவாரத்தில் உள்ள ஒரு கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இடிந்து விழுந்த பகுதி சிறுவனின் தலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
ஹெலமுத்து செவன அடுக்குமாடி குடியிருப்பு தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, 2019ஆம் ஆண்டு பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan