நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் பாதிப்பு
நிலவும் மோசமான காலநிலை காரணமாக நுவரெலிமா மாவட்டத்தில் இன்று (03.08.2026) மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நிலவர அறிக்கையின்படி மாவட்ட செயலாளர் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் சற்று குறைவடைந்து
வெள்ளத்தில் சிக்கி 2 பேரும் மண்சரிவில் சிக்கி 4 பேரும் காணாமல் போயுள்ளனர்.

மேலும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது எனவும் இதுவரை 439 குடும்பங்களைச் சேர்ந்த 1734 பேர் இடம்பெயர்ந்து 7 தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இவர்களுக்கான சகல ஏற்பாடுகளையும் நுவரெலியா மாவட்ட செயலகம் ஊடாக முன்னெடுத்து வருகிறது எனவும் மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் , கொட்டக்கலை மற்றும் தலவாக்கலை போன்ற பிரதேசங்களில் பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
எனினும் இன்று (03) மாலையில் நுவரெலியா நகரில் மழை வெள்ளம் சற்று குறைவடைந்துள்ளது. இருந்த போதிலும் வீடுகளில் வெள்ளநீர் காணப்படுகிறது எனவும் அவர மேலும் தெரிவித்துள்ளார்.
60 பேருக்கு சர்ச்சைக்குரிய விசா வழங்கியது யார்..! பின்னணியில் செயற்பட்ட மறைகரம்! ஆபத்தாக மாறும் இலங்கை