233 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் தற்கொலை!

death Sri Lanka Saudi Arabia Suicide
By Murali May 01, 2021 01:41 AM GMT
Report

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களுக்கு அமைய 2011 மற்றும் 2021ம் ஆண்டுக்கு இடையில், 40 நாடுகளில் பதிவாகியுள்ள இலங்கையர்களின் 2,822 இறப்புகளில், 233 தற்கொலைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றும் மொத்தம் 40 நாடுகள் உள்ளன.

இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சவூதி அரேபியாவில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன என்பதைக் காட்டுகின்றன, குறித்த காலப்பகுதியில் 99 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் ரியாத்தில் அதிகபட்சமான 88 தற்கொலைகளும், ஜித்தாவில் 11 தற்கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதிக்கு அடுத்தப்படியாக குவைத்தில் 29 தற்கொலைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த காலப்பகுதியில் கத்தாரில் 28 மற்றும் துபாயில் 25 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதற்கிடையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், 2016-2021 க்கு இடையில், தோஹா கத்தாரில் இருந்து இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் 237 சடலங்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

2016ம் ஆண்டில், 42 சடலங்களும், 2017 இல் 34 சடலங்களும், 2018 இல் 44 சடலங்களும், 2019 இல் 54 சடலங்களும், 2020 இல் 49 சடலங்களும் மற்றும் 2021 ஆம் ஆண்டில் தோஹாவிலிருந்து 14 சடலங்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,891 இறப்புகள் இயற்கை காரணங்களால் நிகழ்ந்துள்ளன, வீதி விபத்துக்களில் 331 பேர் உயிரிழந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 ஆகவும், பிற விபத்துக்கள் 326 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 டிசம்பர் 12 வரை 149 நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 813,798 ஆகும்.

சவூதி அரேபியாவில் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் 199,578 ஆகவும், கத்தார் 175,545 ஆகவும் உள்ளனர். மூன்றாவது அதிகபட்சமாக குவைத்தில் 167,101 தொழிலாளர்களும், ஐக்கிய அரபு எமிரேட் 115,703 தொழிலாளர்களும், ஓமானில் 29,059 தொழிலாளர்களும், தென் கொரியாவில் 20,997 தொழிலாளர்களும் உள்ளனர்.

2011 மற்றும் 2021 க்கு இடையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 2,822 ஆகும்,

மேலும் அந்தக் காலபகுதியில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் சவூதி அரேபியாவில் நிகழ்ந்துள்ளன, அங்கு மொத்தம் 1,074 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், குவைத்தில் 505 பேரும், கத்தாரில் 396 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 290 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் 4, 2021 நிலவரப்படி மத்திய கிழக்கில் கோவிட் -19 இறப்புகள் 120 ஆக பதிவாகியுள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளிவிவரங்களின்படி பெண்களின் இறப்புகளை விட ஆண்களே அதிகம் என்பதைக் காட்டுகின்றன.

அதிகபட்சமாக குவைத்தில் கோவிட் - 19 இறப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு 36 பேர் உயிரிழந்துள்ளனர். ரியாத்தில் 24 பேரும், துபாயில் 22 பேரும், ஜித்தாவில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான ஆண்கள் குவைத்தில் இறந்துள்ளனர். 20 ஆண் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அங்கு உயிரிழந்துள்ளதாகவும், ரியாத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இறப்புகள் பதிவாகியுள்ளன. அங்கு 16 பேர் இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அதற்கு அடுத்தபடியாக துபாயில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது மத்திய கிழக்கு நாடுகளில் மொத்த ஆண் இறப்பு எண்ணிக்கை 85 ஆகவும், பெண் இறப்புகளின் எண்ணிக்கை 35 ஆகவும் பதிவாகியுள்ளது.

குறித்த கோவிட்ட இறப்புகளில், 51 செல்லுபடியாகும் பதிவு எனவும், 48 காலாவதியான பதிவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குறித்த ஒன்பது நாடுகளில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்படாத 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US