மட்டக்களப்பில் வெள்ளத்தினால் 2319 குடும்பங்கள் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளத்தினால் இதுவரை 2319 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை தொடர்ந்து பெய்து வருவதால், கடந்த 48 மணித்தியாலங்களில் மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
மேலும், பாய்ந்தகல், கிண்ணையடி, பிரம்படித்தீவு, ஈரளக்குளம், மயிலவெட்டுவான், வாகரை மற்றும் கல்லரிப்பு பகுதிகளுக்கு செல்லும் பாதை முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அத்துடன், குறித்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் பொது இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த வெள்ளத்தினால், வவுணதீவு, மண்முனை மேற்கு பகுதிக்கு, படகில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, தாழ்நில பிரதேசங்களில் உள்ள மற்றும் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
[GIRYRZ7 ]
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
