கிளிநொச்சியில் 23 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் 23 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்ககை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் மாத்திரம் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 11 பேர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களும், மேலும் 5 பேர் கிளிநொச்சி பொதுச் சந்தையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு சில நாட்களில் மாத்திரம் 100 பேருக்கு மேல் கோவிட் தொற்றுடன் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே பொது மக்களை கட்டாயம் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்
என்பதோடு, தேவையற்ற பயணங்கள், ஒன்று கூடுவதனையும்
தவிர்த்துக்கொள்ளுமாறும் மாவட்ட சுகாதார பிரிவு வேண்டுகோள்
விடுத்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
