சற்று முன்னர் வெளியானது 22ஆவது திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு..
புதிய இணைப்பு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் குறித்தான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பிலான சபாநாயகரின் அறிவிப்பு வெளியானது.
இதன்படி அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கு சர்வசன வாக்கெடுப்பு தேவையில்லை என்று உயர்நீதிமன்று தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு எளிய பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாக சபாநாயகர் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
முதலாம் இணைப்பு
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உயர் நீதிமன்றத் தீர்ப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், சபாநாயகரால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சபாநாயகரிடம் கையளிப்பு
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தனது முடிவை உயர் நீதிமன்றம் நேற்று சபாநாயகருக்குத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறும்.
இச்சட்டமூலங்கள் மீதான வாக்கெடுப்பு 25ஆம் திகதி பிற்பகலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.