22ஆவது திருத்தச் சட்டம் : சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் தோற்கடிப்பார்கள்! முன்னாள் அமைச்சர் நம்பிக்கை
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும் எனவும், இச்சமரில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,"22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
அவ்வாறு நடத்தப்பட்டால் மக்கள் அதனை நிச்சயம் தோற்கடிப்பார்கள்.
ஆதரவாளர்கள் மத்தியில்
மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் தாங்கள் தோல்வியடைவோம் என்பது அரசுக்கு நன்றாகத் தெரியும் என்பதாலேயே தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றது.

அன்று இருந்த மக்கள் விடுதலை முன்னணிக்கும் இன்று இருக்கும் கட்சிக்கும் இடையில் பாரிய வித்தியாசம் உள்ளது.
இதனால் அவர்களின் சொந்த ஆதரவாளர்கள் மத்தியிலேயே தற்போது பெரும் அதிருப்தி நிலவி வருகின்றது.
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களின் பின்னணியில் தற்போதைய அரசே செயற்பட்டு வருகின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.