கித்துல்கல வாகன விபத்தில் 22 வயதான இளைஞன் பலி
கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் களுகொவுத்தென் கம்பி பாலத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
டயகம பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், எட்டியாந்தோட்டை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கிச் சென்ற கனரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. எனினும் கனரக வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் டயகம முதலாம் பிரிவைச் சேர்ந்த அதிர்ஷ்டநாதன் கோபிநாதன்(வயது - 22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தினால் சில மணி நேரம் அவ்வீதியினுடான போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கித்துல்கல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam