மட்டக்களப்பில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 23 பேர் கைது
மட்டக்களப்பு (Batticaloa)காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் யுத்தியை போதை ஒழிப்பு திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 250 லீட்டர் கசிப்புடன் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஹசீஸ் போதைப் பொருளுடன் ஒருவருமாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.
திடீர் சுற்றி வளைப்பு
காத்தான்குடி, ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு ,நாவற்குடா, உட்பட காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கர்பலா பிரதேசத்தில் வைத்து ஹசீஸ் போதை பொருளுடன் 63 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று(27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
[RSEFGGT
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri