கட்டுநாயக்க விமான நிலையத்தில் 22 தேரர்களின் முகம் சுழிக்க வைக்கும் செயல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 1.1 பில்லியனுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களுடன் 22 பௌத்த பிக்குகள் நேற்றையதினம்(25.4.2026)கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையிலே, கைது செய்யப்பட்ட ஒரு துறவியின் தொலைபேசியில் இருந்து சில வடக்கு மாகாண போதைப்பொருள் விநியோகஸ்தர்களின் தொலைபேசி இலக்கங்கள் இருப்பதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாங்லாந்தில் இருந்து கொண்டு வந்த போதைப்பொருட்களை 25 மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிப்பதே குறித்த 22 தேரர்களின் நோக்கமாகும்.
அநுர அரசாங்கம் போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதனை அவதானித்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பௌத்த பிக்குகள் மூலம் மீண்டும் போதைப்பொருள் வர்த்தகத்தை உருவாக்க முயற்சித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக வைத்து தான் அதிகளவிலான போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு , கிழக்கிலே பல முக்கிய பதவிகளில் இருக்கின்ற தமிழர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 17 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri