இலங்கையை நிலைகுலைய வைத்துள்ள சூறாவளி - தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
இலங்கையை பாதித்த டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவித்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளை பல நாட்களாக பாதித்த பாதகமான வானிலை, கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட சேதத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதற்கமைய, கண்டி, நுவரெலியா, பதுளை, குருணாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலநறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, களுத்துறை ஆகியவை தேசிய பேரிடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய இடர்காப்பு மத்திய நிலையம்
டித்வா சூறாவளி காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிகளவானர்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண வீட்டில் அரசியல்.. 28 நிமிடங்கள் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam