இலங்கையை அச்சுறுத்தும் மோசமான வானிலை : 22 பேர் பலி
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இன்று காலை நிலவரப்படி பதுளை மாவட்டத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக அபேவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, மோசமான வானிலை காரணமாக கண்டி மாவட்டத்தின் பத்தஹேவாஹெட்ட மற்றும் உடுதும்பர பகுதிகளில் 04 பேர் காணாமல் போயுள்ளனர்.
மோசமான வானிலை
17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, மோசமான வானிலை காரணமாக 03 வீடுகள் முழுமையாகவும், 381 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
877 குடும்பங்களை சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.