வவுனியாவில் தேங்கி கிடக்கும் கோவிட் தொற்றால் மரணமடைந்தவர்களின் சடலங்கள்

Corona virus Covid 19 Vavuniya
By Thileepan Sep 17, 2021 06:52 AM GMT
Report

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக மரணமடைந்த 22 பேரின் சடலங்கள் தற்போது தேங்கி உள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ளதுடன், இறப்புக்களும் அதிகரித்து வருகின்றது.

கோவிட் தொற்று காரணமாக மரணமடைபவர்களின் உடல்கள் சுகாதார நடைமுறைகளுடன் வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்திலேயே தகனம் செய்யப்பட்டு வருகின்றது.

குறித்த மின் மாயானமானது கடந்த நான்கு தினங்களாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இதன் திருத்த வேலைக்குரியவர்கள் கொழும்பில் இருந்து வருவதனால் தாமத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்நறது.

இருப்பினும் திருத்த வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் கோவிட் தொற்றால் மரணமடைநச்த 4 பேரின் சடலங்கள் அடக்கம் செய்வதற்காக நேற்று (16.09) ஒட்டமாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தவர்கள் உட்பட 22 பேரின் சடலங்கள் தற்போது தகனம் செய்யப்படாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று (17.09) இரண்டு சடலங்கள் தகனத்திற்காக கெக்கிராவ அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஏனைய சடலங்கள் தேக்க நிலையில் உள்ளன. மின் மாயானம் திருத்தப்பட்டாலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 சடலங்களையே எரியூட்ட முடியும்.

குறித்த சடலங்களை முழுமையாக தகனம் செய்ய ஐந்து தினங்கள் தேவையாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் இறப்புக்கள் ஏற்பட்டால் தகனம் செய்வதில் மேலும் நெருக்கடி நிலை ஏற்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மாவட்டத்தின் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் கோவிட் தொற்றில் இருந்து விடுபட சுகாதாரத் தரப்பினரின் ஆலோசனைகளைப் பின்பற்றுவதுடன், அரசாங்கத்தினதும், சுகாதரப் பிரிவினரதும் கோவிட் ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர் 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US