தேர்தல் சட்டங்களை மீறிய 22 பேர் கைது
தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான விதி மீறல்களில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
54 முறைப்பாடுகள்
கடந்த ஜுலை 26ம் திகதி முதல் இதுவரை காலமும் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் பொலிஸாருக்கு 163 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 119 முறைப்பாடுகள் தேர்தல் விதி மீறல்கள் தொடர்பானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் என்ற வகையீட்டில் உள்ளடக்கப்படக்கூடிய 54 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
