மட்டக்களப்பில் இடம்பெற்ற குமார் பொன்னம்பலத்தின் 21ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மறைந்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21வது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பு கல்லடியில் அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நினைவேந்தல் இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் அவர்களினால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதனைத் தொடர்ந்து மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள், மதகுரு சிவஸ்ரீ கி.சிவபாலன் குருக்கள் மற்றும் சிவில் சமூக ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தி, ஈகைச்சுடர் ஏற்றினர்.
அதனைத் தொடர்ந்து மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவேந்தல் உரைகள் இடம்பெற்றன.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 23 மணி நேரம் முன்
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam