ஏமனில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் பலி
ஏமனில் கிளர்ச்சிப் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்குப் பகுதியில் இராணுவச் சாவடியொன்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அப்யான் மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமை குறிவைத்து அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதில், பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், மற்றவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
