10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது
மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசமொன்றில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணியாற்றிவரும் நிலையில், தாயாருடன் வாழந்துவரும் குறித்த சிறுமியை சம்பவதினமான நேற்று தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சந்தேகநபரை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
