காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் 21 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை!
காலிமுகத்திடல் போராட்ட கள செயற்பாட்டாளர்கள் சிலருக்கு வெளிநாட செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தனிஸ் அலி உட்பட 21 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்பு சேவைகளுக்கு இடையூறு விளைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையில் கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, டுபாய் செல்ல முயன்ற வேளை விமானத்துக்குள் வைத்துக் குற்ற புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்படட தனிஸ் அலி எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் அவர்
முன்னிலைப்படுத்தப்பட்ட போதே அவருக்கு விளக்கமறியலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.