மன்னார் மாவட்டத்தில் மேலும் 21 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் - வைத்தியர் ரி.வினோதன்
மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை புதிதாக மேலும் 21 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஒரு கோவிட் மரணம் இடம்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட கோவிட் நிலவரம் தொடர்பாக அவர் இன்று காலை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மாலை மேலும் புதிதாக 21 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கோவிட் தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மன்னார், முருங்கன் - செட்டியார் கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் மாவட்டத்தில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 1704 கோவிட் தொற்றாளர்களும், தற்போது வரை மொத்தமாக மன்னார் மாவட்டத்தில் 1721 கோவிட் தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 54 நிமிடங்கள் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan