ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக களமிறங்கிய 21 நாடுகள் - எதிராக 15 நாடுகள்! இந்தியா நடுநிலை?
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பரப்புரை வேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியா தலைமையிலான நாடுகளின் கோர் குழு, “மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி இலங்கை மீது தீர்மானத்தை முன்வைக்க திட்டமிட்டுள்ளது.
அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதைத் தடுக்க இலங்கை அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது. இந்நிலையிலேயே, இலங்கை தொடர்பான விவாதம் மனித உரிமைகள் பேரவையில் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியா, நோர்வே, கனடா, ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்த்துப் பேசினர். எனினும், இந்தியாவும், ஜப்பானும் நடுநிலையாக இருந்துள்ளன.
அவுஸ்திரேலியாவும் மேற்கத்திய உலகின் நட்பு நாடாக இருந்தபோதிலும் மிதமான தொனியிலேயே பேசியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பேசிய 21 நாடுகளில், பத்து நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளாகும்.
ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ஈரான், வியட்நாம், மாலைத்தீவுகள், கியூபா, நிகரகுவா, எரிட்ரியா, நேபாளம், கம்போடியா, லாவோஸ், அஜர்பைஜான், வியட்நாம், பெலாரஸ், வட கொரியா, காபோன், பிலிப்பைன்ஸ், சிரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இவற்றில் அடங்கும்.
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam