பருத்தித்துறையில் களவாடப்பட்ட 21 சைக்கிள்கள் பறிமுதல் - சந்தேகநபர் கைது
பருத்தித்துறையில் நீண்ட காலம் திருட்டில் ஈடுபட்டு வந்த அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை சிவன் கோயிலுக்கு அண்மையில் நடமாடிய போது சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சைக்கிள் திருட்டுக்களில் ஈடுபட்டமை தெரியவந்தது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபரால் திருடப்பட்ட 21 சைக்கிள்களைப் பொலிஸார் பறிமுதல் செய்ததுடன்,மேலும் சில சைக்கிள்கள் மீட்கப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு திருடப்பட்ட சைக்கிள்களைச் சந்தேகநபர் விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், சைக்கிள்களைப் பறிகொடுத்தவர்கள் உரிய ஆவணங்களுடன் வருமாறு பருத்தித்துறைப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.